கிரக தோஷங்களும் பரிகாரங்களும்

give

ஒரு ஜாதகருக்கு கிரகங்கள் மூலம் ஏற்படும் தோஷங்களுக்கு கீழ் கண்டுள்ள பரிகாரங்களை அனுசரிக்க வேண்டும்.

சூரியன்

மாணிக்கம், தாமிரம், சொர்ணம், கன்றுக்குட்டியும் பசுவும், கோதுமை, சிவப்பு பட்டு, சிவப்பு துணி இவைகளை தானம் செய்து செந்தாமரை பூவால் சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்து 7000 முறை ஜபம் செய்தால் நலம் பல தரும்.,

சந்திரன்

வெள்ளி, முத்து, பால், வெள்ளை, சாமரம், சங்கு, வெண்பட்டு, வெள்ளை வஸ்திரம், பூணூல், வெள்ளைப்பசு, நெய், கற்பூரம் ஆகியவைகளை தானம் செய்து கற்பூரம் ஏற்றி வெள்ளை அல்லி மலரால் துர்க்காதேவியை 11 ஆயிரம் தடவை ஜெபித்தல் வேண்டும்.

செவ்வாய்

காளை, துவரை, தாமிரம்,பவளம், கோதுமை, சிவப்பு வஸ்திரம் ஆகியவைகளை தகுதிக்கு ஏற்றவாறு தானம் செய்து சிவப்பு அரளி பூவால் ஸ்ரீ சுப்ரமணியரை 10 ஆயிரம் முறை ஜபம் செய்தால் நல்ல பலன் தரும்.

புதன்

பட்டு ஆடை, சர்க்கரை பொங்கல், தங்க விக்ரகம், சந்தன கட்டை, பச்சை பயிறு, யானை தந்தம், நெய் போன்றவைகளை தானம் செய்வது உத்தமமாகும்.

குரு

சர்க்கரை, மஞ்சள், குதிரை, தங்க விக்ரகம், புஷ்பராகம், மஞ்சள் பட்டு வஸ்திரம், நவரத்தின மாலை, அவரை, கடலை, நவரத்தினம் ஆகியவைகளை தானம் செய்து வந்தால் நலம் பல விளையும்.

சுக்கிரன்

வெண்பட்டு, வஜ்ரம், வெள்ளை குதிரை, வெள்ளி விக்ரகம், தாம்பூலம், அவரை, பசு ஆகியவைகளை தானம் செய்து வந்தால் நலம் தரும்.

சனி

எள், பாத்திரம், நீலக்கம்பளி, கருப்பு பட்டு வஸ்திரம், இரும்பு விக்ரகம், கரும்பசு ஆகியவைகளை தானம் செய்தல் நலம்தரும்.

ராகு

எண்ணையுடன் பாத்திரம், கோமேதகம், எருமை, ஈய விக்ரகம், இரும்பு, பூதானம், குடை, உளுந்து ஆகியவைகளை தானம் செய்தல் நலம்தரும்.

கேது

வைடூரியம், விக்ரகம், வெண்கலப் பாத்திரம், பலவர்ண ஆடை, கம்பளி, கொள் ஆகியவைகளை தானம் செய்தல் நன்மை தரும்.

Add Comment

© 2014 All rights reserved. www.exactpredictions.com