பொன்னியின் செல்வன் நாடக விமர்சனம்

ponniyin selvanஆயிரகணக்கான பொன்னியின் செல்வன் நாவலின் ரசிகர்களில் நானும் ஒருவன். பொன்னியின் செல்வன் நாடகமாக அரங்கேறுவதில்  எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. முன் கூட்டியே டிக்கெட் வாங்க முடியவில்லை. இருப்பினும் எப்படியாவது டிக்கெட் வாங்கி விடலாம் என்ற நம்பிக்கையில் முதல் காட்சியான  ஜூலை 8 ஆம் தேதி மாலை 6 மணிக்கு சென்னை மியூசிக் அகடமியை வந்தடைந்தேன். அங்கு பார்க்கிங் நிறைந்து மக்கள் கூட்டம் நிறைந்து இருந்ததை கண்டு மகிழ்ந்தேன். இருபினும் அணைத்து நாட்களுக்கான டிக்கெட்களும் விற்றுவிட்டன என்ற அறிவிப்பை பார்த்து மகிழ்ந்தாலும் நமக்கு டிக்கெட் கிடைக்கவில்லையே என்று சிறிது நேரம் கவலை கொண்டேன். இரண்டு நிமிட தேடலுக்குப்பின் வழக்கம்போல் ப்ளாக்கில் டிக்கெட் கிடைத்தது.

6.3௦ மணிக்கு சரியாக நாடகம் தொடங்கியது. அரங்கில் இருந்து அனைவரும் சோழர் காலத்திற்கு செல்ல ஆரம்பித்தோம்.

ஆடிப்பெருக்கு திருவிழாவில் ஆரம்பிகிறது நாடகம். ஆழ்வார்கடியன் நம்பியும், வல்லவராயன் வத்தியதேவனும் தோன்றுகையில் மக்கள் தானாகவே கைதட்டுகின்றனர். ஆடை வடிவமைப்பாளரை நிச்சியம் பாராட்டியே ஆகவேண்டும். அணைத்து நடிகர்களுக்கும் மிக நன்றாக வடிவமைதிருகின்றார். முதல் காட்சியான ஆடிப்பெருக்கு திருவிழாவிலேயே அனைவரும் மிக அழகாக காட்சியளித்து நல்லதொரு தொடக்கத்தை கொடுத்தனர்.

உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் நான் காணும் முதல் மேடை நாடகம் இதுதான். ஒவ்வொரு காட்சிக்கும் மேடையில் திரைகளையும் அரங்க பொருட்களையும் மாற்றி அமைப்பார்கள் என்று என் மனதில் கற்பனை செய்து கொண்டு சென்றேன். ஆனால் நாடகம் தொடங்கி முடியும் வரை ஒரே அரங்க அமைப்பை மட்டுமே வைத்து முடித்து விட்டார்கள். அரங்கத்தை மாற்றி மாற்றி அமைத்து நேரத்தை வீணடிக்க கூடாது என்று நினைத்தார்களோ என்னவோ? அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட அரங்க அமைப்புகள் அமைப்பதற்கு நாடகத்தின் பட்ஜெட்டில் இடம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அரங்க அமைப்பை செய்தது தோட்டாதரணி என்பதையும், நாடகத்தின் ஸ்பான்சர்கள் மிகப்பெரிய நிறுவனங்கள் என்பதையும் மற்றும் நாடகத்திருக்கு கிடைத்த மிகபெரிய எதிர்ப்பார்ப்பையும் யோசிக்கும் பொழுது அரங்க அமைப்புகளில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாமோ என்று எண்ணத் தோன்றுகின்றது.

நந்தினி மற்றும் குந்தவை பாத்திரங்களுக்கு மிகச்சரியான நபர்களை தேர்வு செய்திருகின்றனர். பொன்னியின் செல்வன் பாத்திரத்தில் நடிப்பவரும் தன் பாத்திரத்தை கனகச்சிதமாக செய்திருகின்றார்.

யாரும் எதிர்பார்க்காத ஆனால் மகிழ்ச்சியான விஷயம் திரைப்பட நடிகர் பசுபதி, ஆதித்த கரிகாலனாக தோன்றும் காட்சிதான். என்ன விறுவிறுப்பு அவர் தோன்றும் காட்சிகளில். அவரது நாடக ஆவலும், நடிப்பும் நமக்குள் ஒரு பரவசத்தை உண்டு பண்ண தவறுவதில்லை.

நாடகத்தை பார்க்க வந்த பெரும்பாலானோர் பொன்னியின் செல்வன் கதையினை ஏற்கெனவே படித்தவர்களாகவே இருப்பர். அதனால் அவர்களுக்கு அடுத்தடுத்த காட்சிகளில் என்ன தோன்றும் என்பது தெளிவாக தெரியும். அனால் பொன்னியின் செல்வனை படிக்காமல் நாடகத்தை பார்பவர்களுக்கு நாடகம் முழுவதாக புரியுமா என்பது சந்தேகமே. அதற்கு நாடகத்தின் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை அடிகடி தோன்றும் புலவர்களை பயன்படுத்தி ஒவ்வொரு காட்சிக்கும் சிறு முன்னுரை கொடுக்கலாம்.

யானையை தத்ரூபமாக மேடையில் கொண்டு வந்ததிற்கு பாராட்டுகள்.

குடந்தை ஜோதிடர் பாத்திரத்தை நாடகத்தில் சேர்த்திருக்கலாம்.

அணிருந்த பிரம்மராயர் இன்னும் கம்பீரமாக இருக்காலாம்.

மிகப்பெரிய நாவலை மூன்றரை மணிநேர நாடகமாக்குவது அதுவும் பொன்னியின் செல்வம் நாவலை நாடகமாகுவது என்பது உள்ளபடியே மிக சவாலான விசயமாகும். அந்த அந்தவகையில் நாம் நமது நன்றியினையும் பாராடுகளையும் ss international மற்றும் magic lantern குழுவினருக்கு சொல்லியே ஆகவேண்டும். நாடகத்தின் முடிவில் அரங்கம் அதிர கிடைக்கும் கரகோசம் அமைப்பாளர்களுக்கு நிச்சயம் மண நிறைவினை தரும் என்று நம்புவோமாக. ss international மற்றும் magic lantern  தொடந்து கலை சேவை செய்ய வேண்டும் என்றும் வாழ்த்துவோம்

- ஆரோக்கிய பாக்கிய நாதன் L

Add Comment

© 2014 All rights reserved. www.exactpredictions.com