exactpredictions.com – ஐந்து வருடங்களை கடந்து பயணிகின்றது.

தமிழில் ஜோதிடத்திற்கு என்று ஒரு சிறந்த இணைய தளத்தை உருவாக்க வேண்டும் என என் மனதில் உதித்த ஒரு சிறிய எண்னம். இது நடந்தது 29-10-2013 அன்று.

அன்றே exactpredictions.com என்ற இணையதள முகவரியை புக் செய்து தொடங்கப்பட்ட ஒரு சிறிய முயற்சி. இப்பொழுது சரியாக ஐந்து வருடம் கழிந்து விட்டது.

இன்று exactpredictions.com -ல் 20079 (இருபது ஆயிரம்) மகிழ்ச்சியான வாடிக்கையாளர்கள் பதிவு செய்து இருக்கின்றனர்.

அவர்கள் மூலம் பதிவு செய்யப்பட்ட மொத்த ஜாதகங்களின் எண்ணிக்கை 34626 (முப்பத்தி  நான்காயிரத்து அறநூறு) ஜாதகங்கள் ஆகும்.

இதில் ஆன் ஜாதகங்கள், 23530 ஆகும். பெண் ஜாதகங்கள் 11069 ஆகும்.

இவ்வளவு ஜாதக ரிப்போர்டுகளும் (34626) இலவசமாக வழங்கப் பட்டிருகின்றது.

இதுவே எனக்கு கிடைத்த மன நிறைவு.

இந்த ஐந்து வருடங்களில் இதற்க்காக நான் செலவிட்ட நேரமும், பணமும் கொஞ்சம் நஞ்சம் அல்ல. இதில் இருந்து எனக்கு வருமானம் எதுவம் பெரிதாக சொல்லிக் கொள்ளும்படியும்  இல்லை.
என் வாழ்வாதாரத்திக்கான வேலை வேறு. அந்த வேலைய தினமும் 12 மணி நேரம் செய்து விட்டு வந்து இரவில், விடுமுறை நாட்களில் என்று அயராது இதற்காக உழைத்திருக்கின்றேன்.

500 -றுக்கும் அதிகமான புத்தகங்கள்/வீடியோ/கட்டுரைகளை ஆய்வு செய்திருக்கின்றேன்.

நான் MBA படித்திருந்தாலும், பல கணினி மென்பொருள்களை கற்றிருந்தாலும், இதறகாகவே தமிழ் ஜோதிடத்தில் பாட்டைய படிப்பும்  (டிப்ளமோ) முடித்திருக்கின்றேன்.

ஏறக்குறைய (311152 php code, 130851 js code, 41093 css code) வரிகள் ப்ரோக்ராம் எழுதி இருக்கின்றேன்.

70000 KB அளவிற்கு டேட்டாபேஸ் தகவல்கள் தமிழில் உள்ளீடு செய்திருக்கின்றேன்.

நூற்றுக்கணக்கான இமேஜ் டிசைன்கள் போட்டோஷாப்பில் செய்து இருக்கின்றேன்.

ஐந்தாம் வருட நிறைவை ஒட்டி exactpredictions.in – home page டிசைனை புதிதாக மாற்றி இருக்கின்றேன்.

இந்த தகவல்களை எல்லாம் நான்பெருமை பாராட்ட கூறவில்லை. மாறாக ஏன் சொல்கின்றேன் என்றால், பணம் நம் வாழ்வில் முக்கியமாக இருந்தாலும், நாம் நம் மனம் திருப்தி பட கூடிய வேலையையம்  ஆத்மார்த்தமாக செய்ய வேண்டும் என்று மக்களை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்க்காக சொல்கின்றேன்.

வாழப்போவது கொஞ்ச நாட்கள் தான். அதனை நிறைவாய் வாழ முயற்சி செய்வோம்.

அன்புடன்,

ஆரோக்கிய பாக்கிய நாதன் L

Add Comment

© 2014 All rights reserved. www.exactpredictions.com