சனி பெயர்ச்சி பலன்கள்

sanipeyarchi

சுத்த திருகனித பஞ்சாங்கப்படி ஜய வருடம் ஐப்பசி மாதம் 16 ஆம் தேதி (நவம்பர் 2 ஆம் தேதி) 2௦14 ஞாயிற்றுக் கிழமை சந்திரன் சதய நட்சத்திரதில், கும்ப ராசியில் நிற்க, சனி பகவான் விசாகம் 4 ஆம் பாதத்திற்கு பெயர்ந்துவிருசிக ராசியில் பிரவேசிகின்றார். இங்கு 2½ ஆண்டுகள் குடியிருந்து இராகுவின் மேற்பார்வையில் அருள் கரம் நீட்டுகின்றார். பொதுவாக சனி கோட்சாரத்தில் ராசிக்கு 3, 6, 11 ல் அமரும்போது நன்மைகளை மிகுந்து செய்வார் என்பது பொது விதி, இந்த சனிப் பெயர்ச்சியில் சனி பகவான் சர்ப்ப கிரகங்களின் ஆட்சிக்கு உட்பட்டு நடப்பார்.

 

மேஷ ராசி

அசுவினி, பரணி மற்றும் கிருத்திகை முதல் பாதம் கொண்டது.

அன்பிற்குரிய மேஷ ராசி நண்பர்களே, இதுவரை களத்திர ஸ்தானத்தில் நின்ற சனி இப்பொழுது அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிகின்றார். ராகுவின் எடுபிடியாக சனி அடுத்த சர்ப்ப பெயர்ச்சி வரைக்கும் பணியாளனாக செயல்புரிவதால், ராசி நேயர்களின் பக்கம் சனியின் கவனம் திரும்பாது. கடகத்தில் நின்ற பாக்கிய குருவானது, அஷ்டமத்தில் உள்ள சனியை பார்த்து புனித படுத்துவதால், குரு, ராகு, சனியினால் உங்களை காட்டிலும் பயனடைபவர்கள் எவர் உண்டு என்றளவில் சுபவிரயங்களும், சௌபாக்கிய இனங்களும் கூடும். சர்ப்பங்கள் உங்கள் ஜாதகத்தில் சுப சாரம் பெற்றிருப்பின் பிரபல யோகங்கள் உங்களை அரவணைக்கும். உங்களுக்கு துணிச்சலையும், மனோபலமும் தைரியமும், சாமர்த்தியமும்அளிப்பார்,

திருமண யோகங்கள் கைகூடும். புதிய ஜீவனத்தை பெறுவீர்கள். பதவி, புகழ், வெற்றி, பகை வெல்லல் மற்றும் பூர்வீக சொத்துகள் கிடைக்கப் பெறுவீர்கள்,

 

ரிஷப ராசி

கிருத்திகை 2,3, 4 பாதங்கள், ரோகினி, மிருகசீரிஷம் 1,2 பாதங்கள் கொண்டது

அன்பிற்குரிய ரிஷப ராசி நண்பர்களே, சனி உங்கள் ராசிக்குரிய தர்மகரும யோகாதிபதியும், பாதகாதிபதியுமாகி இதுவரை செயல்பட்டாலும், இப்பெயற்சி உங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை தீர்வு காண செய்யவும், யோகங்களை அடையப் பெறவும் வழிதடம் அமைத்து உங்களுக்கு உன்னதமான வாழ்கையை அமைத்துக் கொடுக்கும்.

ராகுவின் மேற்பார்வையில் குருவும், சனியும் தொடர்ந்து செயல் பட போகின்றார்கள். அடுத்த குரு மற்றும் சனி பெயர்ச்சி வரை சர்பங்களின் கண்காணிப்பில் நவகிரகங்கள் இயங்குவதால் பிறவி ஜாதகத்தில் சர்ப்பங்கள் அனுகூல சாரம் பெற்றிருப்பின் பிரபல யோகங்கள் சித்தியடைந்து செல்வதிலும், செல்வாக்கிலும், அதிகாரத்திலும், செருக்கிலும் திளைத்து நறுமணம் கமழ குடும்பத்திலும், பொதுவாழ்விலும் ராஜவாழ்க்கையை பெற்றஅரசனின் பிரதிநிதியாய் போற்றப்படுவீர்கள் எனலாம். அபூர்வ ராஜ யோகங்கள் தோன்றி உங்களை திக்குமுக்காட வைக்கும்.

உரிய நேரத்தில் அரசு ஆதாயம், நிதி ஆதாரம், கடன் தொல்லை நீங்கி பகை விலகுதல், சொந்த தொழில் புனைதல் என உங்கள் திறமையை வெளிபடுதுவீர்கள்.

 

மிதுன ராசி

மிருகசீரசம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3 பாதங்கள் அடங்கியது

அன்பிற்குரிய மிதுன ராசி நண்பர்களே, சனி உங்கள் ராசிக்குரிய அஷ்டமத்திற்கு உரிய பாபியானாலும், பக்கியதிற்கும் உரியவராவதால், இப்பெயர்ச்சி உங்களுக்கு எதிர்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண செய்யவும், யோகங்களை அடையப்பெறவும் வழித்தடம் அமைத்து உங்களுக்கு உன்னதமான வாழ்கையை அமைத்துக் கொடுக்கும். சனியானவர் உங்கள் ருண ரோக சத்ரு ஸ்தானத்திற்கு பெயர்கிறார். குருவின் பார்வையை பூரணமாய் பெறுகிறார். சகல தோசங்களும் நீங்கப் பெற்றவராகின்றீர்கள். இந்நிலையில் சர்பங்களின் நேரடி இயக்கத்தில் குருவும், சனியும் அடுத்த பெயர்ச்சி வரைக்கும் அடிமையாய் செயல்படுவதால் குரு மற்றும் சனி பிறவி ஜாதகத்தில் சுப வர்க்கமேறிடின் மற்றும் சர்பங்களும் அனுகூலமாய் அமர்ந்திருப்பின் எதிபாராத நிலையில் பிரபல யோகங்கள் தோன்றி உங்களை மகிழ்ச்சியில் உருள வைத்திடும் என்பதில் ஐயமில்லை,

சுக்கிரன் விருசிகதிற்கு பெயர்ந்து சனியுடன் கூடுவதும் உங்கள் அயன சயனயோகம் விருத்தியாகி புதிய ஜீவனத்தில் அமரவும் அல்லது இருக்கும் பணியில் ஏற்றமடைந்து நிர்வாக அதிகாரிகளின் அமோக ஆதரவுக்கு ஆளாகி புதிய பொறுப்புகளை ஏற்க நேரிடும். மேலான தன ஆதாயங்கள் மற்றும் இதர சலுகைகளும், மதிப்பும் மரியாதையும், ஆள் அடிமை கீர்த்தியும் அடைவீர்கள். குடும்பத்தில் குழந்தைகளின் கல்வி கேள்விகளில் நல்ல வளர்ச்சி ஏற்படும். மனைவியின் அன்பான அனுசரணையும், பெற்றோர்களின் பாசத்திலும் ஈடுபட்டு நிம்மதியும், மனசுக்கு திருப்தியும், வாழ்வில் பூரணத்தையும் அடையப் பெறுவீர்கள். கடன் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள்.

 

கடக ராசி

புனர்பூசம்  4 பாதம், பூசம், ஆயில்யம் அடங்கியது.

அன்பிற்குரிய கடக ராசி நண்பர்களே, உங்கள் ராசிக்கு பூர்வ புண்ணிய விருசிகத்தில் சனி அமர்வது என்பது கேடு பலன்களை அள்ளித் தரும். ராசி நேயர்கள் ஆஞ்சநேயர் மற்றும் விநாயகரை வழிபடுவது நலம் பயக்கும், இளம் வாரிசுகளுக்காக மிருத்யுஞ்சய ஹோமம் மற்றும் ஆயுளை பலப்படுத்தும் ஹோமங்களையும் உரிய வேதியர்களை கொண்டு நடத்துவதும் மிகவும் பிரசித்தமான பலன்களை தரவல்லது,

குருவின் அருளால் பாக்கியங்களும், சனியின் ஏற்றத்தினால் களத்திரதின் அனுகூலங்களும் மற்றும் நீசப்பெண்களின் சகவாச சுகபோக அனுகூலங்களும், ராகுவினால் குறுக்கு வழி ஆதாயங்களும் ராசிக்குரிய சுய ஜீவனவர்த்தகர்கள், அடிமை தொழிலில் பணிபுரிபவர்களும் மேலிடத்தின் ஆதரவும் புகழ் பெருமை கீர்த்தி தனலாபம் மற்றும் புதிய பொறுப்புகளை வகிக்கும் உயர்ந்த பதவிகளும், பிற சலுகைகளும் பெற்று குடும்பத்தில் அனைவரின் அன்பையும் அனுசரனையும் களத்திரதின் அரவணைப்பும் பெற்றோரின் ஆசியையும் பெற்றுஇனிமை காண்பர்,

 

சிம்ம ராசி

மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம் கொண்டது

அன்பிற்குரிய சிம்ம ராசி நண்பர்களே, சனி பெயர்ச்சியால் நன்மைகளும், தீமைகளும் அடையப்பெறுவீர்கள். சனி ராசிக்கு பஞ்சமத்தில் அமர்வது என்பது கேடுபலன்களை அள்ளித் தரும். ராசிக்குரிய யோகா கிரகங்களான செவ்வாயும், குருவும் சர்ப்ப கிரகங்களால் உண்டாகும் தீமைகளை பெருமளவு தடுத்து ஆட்கொள்வார்கள்.

நீதமன்ற விவகாரங்கள் விரைவில் முடிவுக்கு வந்து உங்களுக்கு சாதகமாகவே தீர்ப்புகளும் அமைந்து நிம்மதியை அடையப் பெறுவீர்கள்.

களத்திரயினங்கள் அதி அற்புதமாய் அன்யோன்யத்தை அளித்து மகிழ்வித்திடுவர். குடும்ப பிரச்சனை, தொழில் பிரச்சனை, பங்காளி பிரச்சனை, சமூக பிரச்சனைகள் போன்ற அனைத்தும் விலகி ராசி நேயர்கள் கௌரவ பட்டம், பதவியை தக்க வைத்து கொள்ளல், இழந்த கீர்த்தியை அடைதல், திரண்ட பூர்வீக சொத்துகளுக்கு உரிமை பெறுதல் என எதிர்பாரா நிலையில் களத்திரயினங்களின் மேலான ஒத்துழைப்பையும் பெற்று உங்கள் எண்ணங்கள் நிறைவடைவதை நீங்கள் கண்டு மகிழப்போகின்றீர்கள்.

 

கன்னி ராசி

உத்திரம் 2,3, 4 பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2 பாதங்களை கொண்டது

அன்பிற்குரிய கன்னி ராசி நண்பர்களே, ஜென்மத்தில் அமர்ந்து ராஜ தர்பாரை நடத்தும் ராகுவின் மேற்பார்வையில் அடிமை தொழில் ஏவலாளியாய் சனியும், குருவும் தொண்டு செய்வர். சனி விருசிகத்தில் இருக்க, குருவின் பார்வையை பெறுவதால் தோஷங்கள், பீடைகள் விலகி நல்ல மேலானயோகங்கள் சித்தித்து பகலவன் உதித்துவிடியர்காலமாய் உங்கள் வாழ்கையில் பயம் மனவேதனை தேவையில்லா பிரச்சனைகள் போன்ற அணைத்தும் விலகி நிற்கும், பொது ஜன வசியம் பெற்று வர்த்தகத்திலும், குடும்பத்திலும் அனைவரும் உங்களுக்கு முகம் சுளிக்காமல் நடந்து கொள்வர். மனம், சிந்தனைகள் மாசு கலக்காத தூய்மையுடன் இறைவனுக்கு நன்றி சொல்லி அணைத்து பணிகளிலும் ஏற்றம் பெறுவீர்கள்.

ராசி நேயர்களில் பலருக்கு அரசு ஆதாயம், கல்வி கேள்விகளில் உயர்வு, பதவி உயர்வு பெற்று செல்வத்கை மிகுந்து ஈட்டுவர் எனலாம். ஜீவன மென்மையும், மறைமுக பகையினங்களை தடுத்தும், மதி நுட்பத்துடன் வர்தகயினங்களை தக்க வைத்து கொள்வதும், சிறு சிறு பிரச்சனைகளை முளையிலேயே களை எடுப்பதும், களத்திரயினங்களின் ஒத்துழைப்பும் கிடைக்கப்பெற்று அயன சயன யோகா பாக்கியத்தை பெற்று ஏற்றம் அடைவீர்கள். தனவரவு தொடர்ந்து நீடிப்பதால் வர்தகங்களினால் அவ்வப்போது தோன்றும் தேவையற்ற பிரச்சனைகளை சமாளித்து நிலைத்து நிற்பீர்கள்.

துலாம் ராசி

சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3  பாதங்கள் அடங்கியது.

அன்பிற்குரிய துலாம் ராசி நண்பர்களே, சனி பகவான் புதன், சுக்கிரன் மற்றும் ராகுவிற்கு நண்பர். இத்தன்மையால் இச்சனி பெயர்ச்சியால் துலாம் ராசி அதிக அளவு நன்மை அடையப் பெறுவார்கள். ராஜ தர்பாரை நடத்தும் ராகுவின் மேற்பார்வையில் அடிமை தொழில் ஏவலாளியாய் சனியும், குருவும் செயல்படுவார்கள். ராகு, கேது இருவருமே துலாம் ராசிக்கு யோகாதிபதிகளாய் செயல்படுவார்கள் என்றாலும், பிறவி ஜாதகத்தில் சர்ப்பங்கள் யோக சாரம் பெற்றிருக்காத நிலையில், சர்ப்ப தொடர்பை பெற்றுள்ள சனியால் நன்மைகளை கொடுப்பது என்பது அரிது. எனவே சர்ப்பங்கள் பிறவி ஜாதகத்தில் பாதித்திருப்பின் சனியானவர் பாரபட்சமின்றி நல்ல பலன்களுடன்,கேடு பலன்களையும் அள்ளித் தருவார்.

ஞானிகள் தரிசனம், குருமார்கள் ஆசி, தெய்வீக பணிகள், சன்மார்க்க நெறிகளை அனுஷ்டித்தல், சொத்துகளை பராமரித்தல், குடும்ப ஒற்றுமை பேனுதல் முதலானவைகள் கிடைக்கும். சிறுதொழில், சுய தொழில் செய்வோருக்கு சனியே துணை நின்று முதலீடுகளுக்கும், வர்த்தக இயக்கங்களை மேலோங்க செய்வதற்கும் நல்ல உழைப்பையும் கொடுத்து திறமையை வெளிக்கொணர்ந்து ராசி நேயர்களை உலகிற்கு அடையாளம் காட்டி ஆதாயங்களையும் அடையச் செய்கின்றார்.

விருச்சிக ராசி

விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை அடங்கியது

அன்பிற்குரிய விருச்சிக ராசி நண்பர்களே, ராகுவின் நேர் பார்வையில் அவனுக்கு பனியாளராக செயல்படுவதால் ஏழரைநாட்டு ஜென்ம சனியானவர் சுதந்திரமாக செயல்பட முடியாது. ஆக விருச்சிக ராசி நேயர்களுக்கு சனியால் எவ்வித உபாதையும் பெரிய அளவில் தோன்றாது. பிறவி ஜாதகத்தில் சர்ப்பங்கள்சுபவர்கமேறின், ராசி நேயர்கள் சர்ப்பங்களால் நல்ல ஏற்றங்களை பெற்று சுகங்களை அனுபவிக்க இயலும், நிராசையின்றி தேவைகளைப் பெற்று பாக்கிய சுகங்களை அடைந்திடலாம்,

பொதுவாக ராசிநேயர்களின் தன பாக்கியமும், களதிரமும் விரிவடைந்து செயல்பட துவங்கும். குடும்பத்தில் சுப விரயங்கள் தோன்றும். பலர் அயல் நாடு சென்று பணியில் அமர்வர். இளைய தலைமுறை விருச்சிக ராசி அன்பர்களுக்கு திருமணம் கைகூடும். நடிகர், நடிகைகள், கலைத்துறை நண்பர்கள், ஆடை ஆபரண உற்பத்தி மற்றும் விற்ப்பனையில் ஈடுபடுவோர், சிறு வர்த்தகர்கள் மற்றும் என்னற்ற சுய தொழிலில் ஈடுபட்டு ஜீவனத்தை பெறுவோர் அனைவரும் வழக்கத்திற்கு மாறாகபலவிதங்களில் தன ஆதாயங்களை அடைந்திடுவர்.

 

தனுசு ராசி

மூலம், பூராடம், உத்திராடம் 1 பாதம் கொண்டது

அன்பிற்குரிய தனுசு ராசி நண்பர்களே, பொதுவாகவே சனி பகவான், புதன், சுக்கிரன் மற்றும் ராகுவிற்கும் நண்பர். குருவின் ஆசிக்கு உகந்த பணியாளராய் இருப்பதால் சனி கேடு பலன்களை தவிர்த்திடுவார் எனலாம். இவ்வருட சனி பெயர்ச்சியால் தனுசு ராசி நேயர்களுக்கு விரைய சனி எனினும் களத்திர புதனின் பேராற்றலால் அதிக அளவு ஆதாயங்களை அடையப் பெறுவார்கள்.

ஆற்று வெள்ளம் போல் தனமும், செல்வமும், கல்வி கேள்வி கலைகள், பட்டங்கள், போட்டிகள், கீர்த்திகள் என்ற பல பேறுகள் உண்டாகும். புண்ணிய நதிகளில் நீராடுதல், தெய்வீக சுற்றுலா செல்லுதல், போக பாக்கியத்தை அனுபவிக்க வெளிநாடு பயனித்தல், நோய் நொடி அற்று குடும்பத்தில் குதுகலம் மகிழ்ச்சி, இனபந்து புத்திரர்கள் ஒற்றுமை பாராட்டுதல், சொத்துகளை சேர்த்தல் என பலவகையிலும் ஏற்றத்தை அளித்து உங்களை சனி பகவான் திக்குமுக்கு ஆட செய்வார்.

 

மகர ராசி

உத்திராடம் 2,3, 4ம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2 பாதங்கள் அடங்கியது

அன்பிற்குரிய மகர ராசி நண்பர்களே, இலாபத்தில் நிற்கும் சனி ஆதாயங்களை தருவதோடு, எதிர்படும் கெடுபலன்களையும் தவிர்திடுவார். மகர ராசி நேயர்களுக்கு ஆதாய சனியாகி அதிக அளவு ஆதாயங்களை அடையப் பெறுவீர்கள். விருசிகத்தில் பெயர்ந்த சனி, குருவின் பார்வை பெற்றும், ராகுவின் பார்வைக்கு இலக்காகியும் ஒன்றரை ஆண்டு கால அளவில் ராகுவின் இச்சைக்கு உட்பட்டு செயல்படும் பணியாளராக அடிமைதொழில் செய்வார். பிறவி ஜாதகத்தில் கிரகங்கள் எவ்விதம் இருபினும் சர்பங்களான ராகு கேது சுபவர்க்கம் பெறின் நன்மைகள் இந்த சனிபெயர்சியில் மிகுந்து நிற்கும் என்பதில் ஐயமில்லை.

உங்கள் செல்வம், ஜீவன வர்கங்கள், மாத வருமான இனங்கள் அனைத்தும் பல மடங்கு பெருகி தரித்திரம் நீங்கி குடும்பத்திலும், உங்கள் வர்த்தக நிலையத்திலும் தன வரவு தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கும். கடன் உபாதைகள் நீங்கும். புதிய சேமிப்புகள் கூடும். சொத்துகளை அடமானம் வைத்திருப்பின் கடன்களை முற்றிலும் செலுத்தி சொத்துகளை மீட்டுக் கொள்வீர்கள்.

 

கும்ப ராசி

அவிட்டம் 3, 4ம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1,2,3 பாதங்கள் அடங்கியது

அன்பிற்குரிய கும்ப ராசி நண்பர்களே, ஜீவன கர்ம விருசிகதில் பெயர்ந்திடும் சனி, ஜீவனங்களை அளிப்பதோடு எதிர்படும் கெடுபலன்ங்களையும் தவிர்திடுவார், இவ்வருட சனி பெயர்ச்சியால் கும்ப ராசி நேயர்களுக்கு கர்ம சனியாகி, ராகுவின் துணையுடன் அதிக அளவு ஜீவன் விருத்திகளை தரும முறையில் அடையப் பெறுவீர்கள். உங்கள் ஜென்ம ராசிக்குரிய சனீஸ்வரரே அயன சயன போகதானத்திற்கும் பொறுப்பபேர்க்கின்றார். இந்நிலையில் விருசிகதிற்கு பெயர்ந்த சனியை கண்ணியில் உள்ள ராகு தொடர்ந்து பார்பதால் நீங்கள் இதுவரை பட்ட கஷ்டங்கள் உங்களை விட்டு விலகி, மனசோர்வும் நிம்மதியற்ற நிலையும் மாறி பல்வேறு பேறுகளைப் பெற்று இனிமை காண்பீர்கள்.

அணைத்து மங்கள இனங்களும் பெருக்கெடுத்து ஓடும். வீட்டிலும், பணியிடத்திலும் மற்றும் தொழில் வர்த்தகத்தை மேலோங்க செய்யும். பழைய கடன்கள் முற்றிலும் பைசலாகும். தன வரத்து பெருகும். லாப தாயங்கள் பெருகும். பகையினங்கள் தலை கவிழ்ந்து ஓடும். பிணிகளின் வாட்டம் முற்றிலும் நீங்கி புதிய சரீர பலத்தை பெற்றிடுவர். குடும்பத்தில் இனபந்துகள் உங்கள் கரத்தை பலப்படுத்துவர்.

 

மீன ராசி

பூரட்டாதி  4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி அடங்கியது.

அன்பிற்குரிய மீன ராசி நண்பர்களே, விருசிகத்தில் பெயர்திடும் சனியை குரு பார்க்க, இவ்வருட சனி பெயர்ச்சியில் பாக்கிய தரும சனியாகி, ராகுவின் துணையுடன் அதிக அளவு ஜீவன தரும கரும விருத்திகளை அடைப் பெறுவீர்கள். உங்கள் ஜென்ம ராசிக்கு சனி பகவானே லாபத்திற்கும், அயன சயன போகதிர்கான விரயதிற்கும் பொறுப்பேற்கின்றார். நீங்கள் இதுகாறும் [பட்ட கஷ்டங்கள், நஷ்டங்கள் உங்களை விட்டு விலகி, மனசோர்வு மற்றும் நிம்மதியற்ற நிலையும் மாறி பல்வேறு பேறுகளை பெற்று இனிமை காண்பீர்கள்.

வியாபாரம், சுயதொழில், அடிமை தொழில், கமிஷன் ஏஜென்சி, கன்சல்டிங் சர்விசஸ், போதகர்கள். ஆசிரிய பெருமக்கள் ஜீவன உயர்வுகளையும், தன லாப ஆதாயங்களையும் அடையப் பெறுவார்கள். ஐந்துக்கும் பத்துக்கும் கஷ்டப்பட்டவர்கள் பெட்டி பெட்டியாக பணம் சம்பாதிப்பார்கள். சொந்த வீடு அமையும். வெளி நாட்டு பயணங்கள் அமையும். ஆடை ஆபரண சேர்கை உண்டு.

 

Add Comment

© 2014 All rights reserved. www.exactpredictions.com